கோவை மாவட்டம் சுந்தராபுரம் அடுத்த மாச்சம்பாளையம் பகுதி சாலை – S B டவர் மற்றும் சுந்தராபுரம் சுற்றியுள்ள பகுதி மக்கள் அதிகமாக பயன்படுத்தும் முக்கியமான சாலையாக உள்ளது. இந்த முக்கியமான சாலையில் கோவை மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் இந்த சாலையில் தான் தினமும் பயணிக்கிறார்.
மேலும் கவுன்சிலர்கள் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பல அதிகாரிகளும் அரசியல் பிரமுகர்களும் இந்தச் சாலையில் பயணிக்கிறார்கள் ஆனால் இந்த சாலையின் அவல நிலையை அரசியல்வாதிகளோ அல்லது அதிகாரிகளோ கண்டு கொள்வதில்லை என்று அப்பகுதி மக்கள் புலம்பி வருகிறார்கள்.
இது குறித்து சமூக ஆய்வாளர்கள் கூறியதாவது:-
இந்தப் பகுதியில் இதற்கு முன்னால் ஆதிமுகவை சேர்ந்த தெற்குமண்டல தலைவர் நீண்ட காலமாக இருந்தார் அவரும் இதை முறையாக பராமரிக்கவில்லை இப்பொழுது திமுகவின் சார்பாக தெற்கு மண்டல தலைவர் இதே பகுதியைச் சேர்ந்த கவுன்சிலரும், தெற்கு மாவட்ட தலைவருமாக உள்ளார்.
ஆனால் இவரும் இந்த பகுதியை கண்டு கொள்வதில்லை ஏனென்று தெரியவில்லை பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தும் இந்த சாலையில் இது போன்ற துர்நாற்றம் மற்றும் மழை நீர் கழிவு வாய்க்கால் சீர்கெட்டு இருக்கும் பட்சத்தில் குழந்தைகளும் முதியோர்களும் தொற்று நோயால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது,
மேலும் தோல் நோய்கள் மற்றும் தோல் சம்பந்தமான பிரச்சனைகள் அதிகமாக வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த சாலையை சீர் செய்வது பொதுமக்களின் சுகாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆய்வாளர்களும் கூறுகின்றனர்.
-A.சுமையா பர்வீன்.
One Response
To work the place