ஒடையகுளம் பேரூராட்சிக்கு உட்பட்ட சுள்ளிமேடுப்பதி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அருகில் தொடர் மழை காரணமாக வேப்பமரம் வேரோடு சாய்ந்து நடுரோட்டில் விழுந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக அந்த மரம் விழுகும் நேரத்தில் அங்கு யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
மேலும் இந்த மரம் விழுந்த தகவலை தெரிந்த ஒடையகுளம் பேரூராட்சி கவுன்சிலர் வினோத் குமார் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு அங்கு விழுந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணிகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் கொடுத்து உடனடியாக மரத்தினை அப்புறப்படுத்தினர்.
கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து மரத்தை அப்புறப்படுத்த முயற்சிகளை மேற்கொண்ட கவுன்சிர் வினோத்குமாரை இப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர். இந்த பகுதியில் மரம் விழுந்ததால் சில மணி நேரம் இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடன் பேரூராட்சி கிராம அலுவலர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-அலாவுதீன் ஆனைமலை.