கோவை மாவட்டம் ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்டது நரிக்கள்பதி.இந்த ஊரின் அருகே உள்ள ஒரு தோப்பில் பொன்ராஜ்(46) வயதுடைய நபர் எட்டு வருடங்களாக வேலை செய்து வந்துள்ளார். இவர் நேற்று தோப்பில் தேங்காய்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்துள்ளார். அப்பொழுது அந்த தோப்பின் கிணற்று ஓரத்திலிருந்த தேங்காயை எடுப்பதற்காக முயற்சி செய்துள்ளார்.
அப்பொழுது எதிர்பாராதவிதமாக கிணற்றில் விழுந்து இறந்தார் என கூறப்படுகிறது. இத்தகவலை அறிந்த வந்து ஆனைமலை காவல் நிலைய போலீசார் அங்கு விசாரணை செய்து இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆனைமலை தமுமுக ஆம்புலன்ஸ் மூலமாக வேட்டைக்காரன்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் சோகத்திற்கு உள்ளானார்கள்.
நாளைய வரலாறு செய்திக்காக
-அலாவுதீன் ஆனைமலை.