பிச்சை எடுத்து சேர்த்து வைத்த ரூ.10 ஆயிரத்தை முதியவர் ஒருவர் இலங்கை தமிழர்களுக்காக தமிழக முதல்வர் நிவாரண நிதிக்காக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார். தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்தவர் சந்நியாசி புல்பாண்டி (72).
கோயில் கோயிலாக சென்று பிச்சை எடுத்து வரும் இவர், வேலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அவர் பிச்சை எடுத்து சேர்த்து வைத்திருந்த ரூ.10 ஆயிரம் பணத்தை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் வங்கி கிளை மூலம் இலங்கை தமிழர்களுக்காக தமிழக முதல்வர் நிவாரண நிதிக்காக அனுப்பி வைத்து அதன் ரசீதை வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியனிடம் வழங்கி அவரிடம் பாராட்டை பெற்றார்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-வேல்முருகன், தூத்துக்குடி.