கோவை மாநகராட்சி 86வது வார்டிற்க்கு உட்பட்ட முத்து காலனியில் உள்ள மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் பெற்றோர், ஆசிரியர் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாமன்ற உறுப்பினரும், மாநகராட்சி கல்வி குழு உறுப்பினருமான இ.அஹமதுகபீர் MC கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாமன்ற உறுப்பினரிடத்தில் கோரிக்கைகளை முன் வைத்தனர். அவர்களின் கோரிக்கையை மாமன்ற கூட்டத்திலும், கல்வி குழு கூட்டத்தில் வலியுறுத்தி நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.
இந்த கூட்டத்தில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், தி.மு.க பகுதி பொறுப்பாளர் ஜெய்லாபுதீன், அஷ்ரப் தமுமுக மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான், காஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திக்காக
– i முஜீப்ரஹ்மான் செல்வபுரம்.