குமாரபாளையத்தில் இருந்து திருச்செங்கோட்டிற்கு அதிக பஸ் விட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குமாரபாளையத்தில் இருந்து திருச்செங்கோடு செல்லும் ஆனங்கூர் வழியில் வெப்படை, உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் மாணவ, மாணவியர், விசைத்தறி, கைத்தறி, சாயப்பட்டறை உள்ளிட்ட தொழில் நிறுவனங்களுக்கு வேலைக்கு வரும் தொழிலாளர்கள், மருத்துவ மனைகளுக்கு வரும் நோயாளிகள் என பல தரப்பினர் குமாரபாளையம் வருகின்றனர். பள்ளி, கல்லூரி, மற்றும் இதர பணிகளுக்கு வரும் நபர்கள் திருச்செங்கோடு செல்லும் 8 எண் கொண்ட டவுன் பஸ் பயன்படுத்தி வருகின்றனர். இது ஓரிரு பஸ் மட்டும் இருப்பதால் அதிக கூட்டம் ஏறி வருகின்றனர். இதனால் விபத்து அபாயம், நோய் தொற்று ஏற்பட காரணமாக அமைத்துள்ளது. ஆகவே இவ்வழியே அதிக பஸ்கள் விட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ரஞ்சித் குமார் திருச்சங்கோடு.