மதுரை ரயில்வே கோட்ட மேலாளரை சந்தித்து, பொள்ளாச்சி ரயில் பயணியர் நலச்சங் கத்தினர் மனு பொள்ளாச்சி வழியாக, இயங்கிய‘மீட்டர் கேஜ்’ ரயில்களையும் புதிய ரயில்கள் இயக்க வலியுறுத்தி, மதுரை ரயில்வே கோட்ட மேலாளரிடம் பொள்ளாச்சி ரயில் பயணியர் நலச்சங்
கத்தினர் மனு கொடுத்துள்ளனர்.
கொடுத்த மனுவில் கூறி யிருப்பதாவது:-
கிணத்துக்கடவு பொள்ளாச்சி ரயில் நிலையத்தை , பாலக்காடு கோட்டத்திலிருந்து
பிரித்து மதுரை கோட்டத்துடன் இணையுங்கள் பொள்ளாச்சியில் 2008ம் ஆண்டு வரையில் இயங்கிய அனைத்து ரயில்களையும் இயக்க வேண்டும். திருச்செந்தூர் ரயில் மேட்டுப்பாளையம் பொள்ளாச்சி வழியாக, திருச்செந்துருக்கு இயக்க வேண்டும்.
கோவை – பொள்ளாச்சி, திண்டுக்கல் மற்றும் திருச்சி வழியாக சில ரயில்களை இயக்க வேண்டும். திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் வரையில், வாராந்திர சிறப்பு ரயிலாக இயக்கப்படுகிறது. இந்த ரயிலை நிரந்தரமாக்கி தினமும் இயக்க வேண்டும். என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மதுரை ரயில்வே கோட்ட மேலாளரை சந்தித்து, பொள்ளாச்சி ரயில் பயணியர் நலச்சங் கத்தினர் மனுகொடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-அலாவுதீன் ஆனைமலை.