மும்பையில் நடைபெற்று வரும் தயாரிப்பாளர் போனி கபூர் படத்திற்காக போடப்பட்ட பிரமாண்ட செட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
போனி கபூர் திரைப்படம்:
சினிமாவில் பல வெற்றிப் படங்களுக்கு தயாரிப்பாளராக வலம் வருபவர் போனி கபூர். இந்நிலையில் பாலிவுட்டில் இயக்குனர் லவ் ரஞ்சன் புதிதாக இயக்கும் படத்தை தயாரிக்க உள்ளார். இதில் ரன்பீர் கபூர், ஷ்ரத்தா கபூர் நடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளர் போனி கபூர் நடிகராக அறிமுகமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் தீவிரமாக நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து ஒரு பாடலுக்காக மும்பை அந்தேரி பகுதியில் அமைந்துள்ள சித்ரகூட் என்கிற மைதானத்தில் பிரமாண்ட அரங்கு அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அந்த அரங்கில் இறுதி வேலைக்கான பணிகள் நடை பெற்றிருக்கும் போது திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ஒளி விளக்குகள் சரியாக ஒளிக்கிறதா என்று சோதிக்கும் போது மின்கசிவு ஏற்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டு அரங்கம் முழுவதும் பரவ ஆரம்பித்து ஒட்டுமொத்தமாக கருகியது. தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். அரங்கில் ஏற்பட்ட தீயால் ஒரு நபர் உடல் கருகி இறந்துள்ளார். இதனால் அப்படக்குழுவினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் ரன்பீர் கபூர், ஷ்ரத்தா கபூர் ரிகர்சலில் கலந்து கொள்ளாததால் உயிர் தப்பினர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
நாளைய வரலாறு செய்திக்காக
-சிவகுமார் சிந்தாதிரிப்பேட்டை.