கோவை மாநகராட்சி 86வது வார்டிற்க்கு உட்பட்ட சூப்பர் கார்டன் பகுதியில் சாக்கடை நீர் அடைப்பு ஏற்பட்டு நிரம்பி வழிந்து ஓடுகிறது என்று புகார் வந்ததையடுத்து மனிதநேய மக்கள் கட்சியின் மாமன்ற உறுப்பினர் இ.அஹமது கபீர் MC ஆய்வு செய்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக சரி செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் முன்னாள் மாமன்ற உறுப்பினர் A. சாதிக் அலி Ex.MC, தமுமுக மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான், ஜுபைர் பாய், அப்பாஸ், ஜெய்லானி மற்றும் பலர் இருந்தனர். இது போன்ற உடனடி சேவையின் மூலம் கோவையில் உள்ள வார்டுகளின் மாமன்ற உறுப்பினர்களில்
முதன்மையானவராக திகழ்கிறார் என்று சமூக ஆர்வலர்களால் பாராட்டப்டுகிறார்.
நாளைய வரலாறு செய்திக்காக
-i முஜீப்ரஹ்மான்
செல்வபுரம்