கடந்த சில நாட்களாக ஆனைமலை சுற்றுப்பகுதிகளில் மாழை தொடர்ந்து பெய்து. வருகிறது இதனால் பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் மழையில் நனைந்தபடியே செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்த நிலையில் இன்று மதியம் வேடசந்தூரில் சாலையோரத்தில் இருந்த மே பிளவர் மரம் மழை காற்றுக்கு தாங்காமல் பொள்ளாச்சி சாலையில் திடீரென்று ரோட்டின் குறுக்கே விழுந்தது அப்பொழுது அவ்வழியாக பொள்ளாச்சி சென்று கொண்டிருந்த செந்தில் என்பவர் கார் மீது விழுந்தது இதில் பயணம் செய்த செந்திலுக்கு எவ்வித காயங்கள் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
அதேபோல் மரம் சாயும் பொழுது அருகில் இருந்த மின் கம்பம் ஒடிந்து விழுந்தது இதனை அறிந்த மின்வாரிய ஊழியர் உடனடியாக மின் இணைப்பை துண்டித்தார் இதனால் எவ்வித அசம்பாவிதங்கள் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது மே பிளவர் மரம் ரோட்டில் சாய்ந்ததால் இவ்வழியாக செல்லும் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
உடனடியாக நெடுஞ்சாலை துறை மற்றும் பொதுமக்கள் இணைந்து ரோட்டில் விழுந்து இருந்த மரத்தினை வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர் இதனால் இப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து மற்றும் மின் இணைப்பு பாதிக்கப்பட்டது.
நாளை வரலாறு செய்திக்காக
-அலாவுதீன் ஆனைமலை.