அம்பராம்பாளையம் கிராமத்தில் குடியிருப்பு நிலங்களை விற்பனை செய்ய தடையில்லா சான்று கோரும் நடைமுறையை நீக்கவேண்டியபொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 18-ஆம் தேதி திங்கட்கிழமை இன்றுகோரிக்கை மனு அளித்துள்ளனர். மேலும் அந்த மனுவில் கூறியுள்ளதாவது; “அம்பராம்பாளையம் கிராமத்தில் நாங்கள் மூன்று நான்கு தலைமுறையாய் அனைத்து சமூதாயத்தவரும் நற்ப்போடும் எந்தவித சாதி பேதம் இல்லாமல் வாழ்ந்து வருகின்றோம். இருப்பினும் கடந்த ஆண்டுகளில் எங்கள் கிராமத்தில் அரசு வழங்கிய
குடியிருப்பு பட்டா வாரிசு அடிப்படையிலும், பட்டா உரிமையாளர் தனது இடத்தை
விற்றாலும் அந்த இடத்தை தனிநபர் வாங்கினாலும் எந்த வித தடை இல்லாமல் பத்திர பதிவு செய்துக்கொண்டிருந்தோம் கடந்த 2 மாதகாலமாக எங்கள் கிராமத்தில் உள்ள
வீட்டுமனை பாட்டாவினை பத்திர பதிவு செய்ய முடியவில்லை மேலும் வங்கிகளிலும்
வீட்டுமனைகடன் (HOME LOAN) பெறமுடியாமலும் தவிர்த்து வருகிறோம் நாங்கள் மேலும்
பத்திரபதிவு அலுவலக அதிகாரிகளை அணுகியபோது அம்பராம்பாளையம் கிராமத்தில்
TAMIL NADU WAQF BOARD PROPERTY இருபதாகவும் இதனால் பத்திரபதிவு அலுவலகத்தில் குடியிருப்பு பட்டாக்களை பத்திரம் செய்ய WAQF BOARD-ல் தடையில்லா சான்றை (NOC) பட்டா உரிமையளார் வாங்கிவருமாறு கூறுகின்றனார் கடந்த காலங்களில் எங்கள் கிரமாத்தில் உள்ள குடிருப்பு
பட்டாவினை பதிவு செய்ய இதுபோன்ற தடையில்லா சான்று (NOC) நடைமுறை ஏதும்
பின்பற்றவில்லை ஆதலால் தங்கள் இதனை நீக்க நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டிகிறோம். என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
நாளைய வரலாறு செய்திக்காக
-அலாவுதீன் ஆனைமலை.