கோவை மாவட்டம் வால்பாறை ரொட்டிக்கடை குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்த சிங்கவால் குரங்குகள் சுரேஷ்குமார் என்பவரின் வீட்டின் மேற்கூரையை உடைத்து உள்ளே சென்று சமையல் அறையில் இருந்த உணவு பொருட்களை தின்றதோடு பாத்திரங்களை உடைத்து உணவு சமைப்பதற்கு வைத்திருந்த அனைத்து பொருட்களையும் தேசப் படுத்தியுள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருவதால் வால்பாறை பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகிறார்கள். சிங்கவால் குரங்குகளை கண்காணிப்பதற்காக இயற்கை ஆர்வலர்கள் மற்றும் வால்பாறை வனச்சரக வனத்துறையினர் பணியாளர்களை நியமித்து கண்காணித்து வரும் நிலையில் அவர்களின் கண்காணிப்பையும் மீறி சிங்கவால் குரங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து அட்டகாசம் செய்கின்றன. குடியிருப்பு பகுதிக்குள் நுழையாமல் இருக்க வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி, கட்டுப்படுத்த வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வால்பாறை பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-M.சுரேஷ்குமார்.