தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட முதல் படத்தை வெளியிட்டது. நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படம் பிடித்த பிரபஞ்சத்தின் முதலாவது புகைப்படத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டு பெருமை தெரிவித்துள்ளார்.
இந்த புகைப்படம் மூலமாக விண்வெளியில் ஆயிரக்கணக்கான பால்வழி மண்டலங்கள் இருப்பது தெரிகிறது. உலகின் முன்னணி விண்வெளி ஆய்வு மையமாக நாசா ஆய்வு மையம் திகழ்கிறது.ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி என்பது உலகின் முதன்மையான விண்வெளி அறிவியல் ஆய்வகமாகும். விண்வெளியில் இதுவரை எடுக்கப்பட்ட படங்களில் இதுதான் மிகத்தெளிவான படம் என நாசா பெருமிதம்.
-புயல்.