கேம்ப்லாபாத்தில் இயங்கி வரும் YMS நிர்வாகத்தின் சார்பாக 12.10வது பொதுதேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி ஜாமிஉல் அன்வர் மதரஸாவில் வைத்து இரவு 8.30 மணி முதல் 10 மணி வரை நடைபெற்றது.
ஜாமிஉல் அன்வர் பள்ளிவாசல் தலைவர் நெய்னா முஹம்மத் தலைமை தாங்கினார்.ஜமாத் நிர்வாகிகள் முன்னிலை வகித்தார்கள் ஜமாஅத் பொருளாளர் ஹாஜா உதுமான் மற்றும் அர்ரஹ்மான் அறக்கட்டளை நிர்வாகி அன்சாரி பள்ளிவாசல் இமாம் முஸ்தபா ஆலிம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
12.10வது பொதுதேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் YMS சான்றிதழ் கொடுத்து கௌரவிக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் நன்கு படிக்கும் மாணவ மாணவிகளின் முழுகல்வி செலவை ஏற்கும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாளைய வரலாறு செய்தியாளர்
-அன்சாரி நெல்லை .