15 வது ஆசிய கோப்பை தொடர் ஆகஸ்ட் 27 தேதி( நாளை )ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைபெற உள்ளது. ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கும் 6 அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகளில் பங்கேற்கும். குரூப் A பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணி மற்றும் தகுதி சுற்றில் வெற்றி பெரும் அணியும் இடம் பெற்றுள்ளது.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
குரூப் B பிரிவில் ஆப்கானிஸ்தான், பங்காளதேஷ், இலங்கை அணிகள் இடம் பெற்றுள்ளன. குரூப் A, B பிரிபில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் இரண்டு அணிகள் அரையிறுதி சுற்றில் விளையாட உள்ளது. நாளை நடக்க இருக்கும் முதல் போட்டியில் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகள் மோதுகின்றன.
ஆக.28ல் துபாயில் நடக்கும் மோதலில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டியை காண ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
தேதி பிரிவு அணிகள் இடம்
ஆக. 27 ‘பி’ இலங்கை-ஆப்கன் துபாய்
ஆக. 28 ‘ஏ’ இந்தியா-பாகிஸ்தான் துபாய்
ஆக. 30 ‘பி’ ஆப்கன்-வங்கதேசம் சார்ஜா
ஆக. 31 ‘ஏ’ இந்தியா-ஹாங்காங் துபாய்
செப். 1 ‘பி’ இலங்கை-வங்கதேசம் துபாய்
செப். 2 ‘ஏ’ பாகிஸ்தான்-ஹாங்காங் சார்ஜா
செப்., 3 முதல் செப். 9 வரை ‘சூப்பர்-4’ சுற்று போட்டிகள் நடக்கும்.
அனைத்து போட்டிகளும் இரவு 7:30 மணிக்கு துவங்கும்.
-அருண்குமார், கிணத்துக்கடவு.