கோவை மாவட்டம் பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியைச் சேர்ந்த முருகேசன் ( 45 ) என்பவர் ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நேற்று பொள்ளாச்சியிலிருந்து பயணி ஒருவரை ஏற்றிக்கொண்டு நல்லூர் சென்றார். அப்பொழுது பயணியிடம் வாடகை வாங்குவதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பயணி கையில் இருந்த அரிவாளால் ஆட்டோ டிரைவர் முருகேசன் தலையில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதனை அடுத்து காயமடைந்த முருகேசனை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திக்காக
–M.சுரேஷ் குமார்