தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் பலபேருக்கு தூக்குக் கயிறாக மாறிவரும் நிலையில், தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்குமா..? விதிக்காத..? என்ற கேள்வி மக்கள் மத்தியில்
எழுந்து வந்த நிலையில், ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிப்பது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவது குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க தமிழக அரசு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை “[email protected]” என்ற மின்னஞ்சல் முகவரியில் வரும் 12ம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-M.சுரேஷ்குமார்.