கோவையில் இணையதளத்தில் குறிப்பிட்ட அபார்ட்மென்ட் குடியிருப்பில் விபச்சார அழகிகள் இருப்பதாக இணையதளத்தில் விளம்பரம் செய்துள்ளனர். இதைக்கண்ட சபலப் பேர்வழிகள் பலர், இணையதளத்தில் பணம் செலுத்தி விட்டு, குறிப்பிட்ட முகவரிக்கு சென்றனர்.
ஆனால், அது குடும்பத்தினர் வசிக்கும் அபார்ட்மென்ட் என்று அறிந்த சபலப் பேர்வழிகள், அபார்ட்மென்ட்டில் வசிப்போரிடமும், பாதுகாவலரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொல்லை அதிகரித்ததால், அபார்ட்மென்ட் சார்பில் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்தப் புகாரின் பேரில் துணை கமிஷனர் சிலம்பரசன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் அமுதா தலைமையில் தனிப்படை அமைத்து கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். தனிப்படை விசாரணை முடிவில், கும்பல் தலைவன் பெங்களூருவை சேர்ந்த ரிஸ்வான், 31, உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர். இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதால் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு காவல்துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-அருண்குமார், கிணத்துக்கடவு.