இந்திய தர நிர்ணய ஆணையத்தில் (BIS) வேலை – 100 காலிப்பணியிடங்கள்..!

    BIS New Recruitment 2022 : இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியானதில் இருந்து 21 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்திய தர நிர்ணய ஆணையம் (BIS) காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Graduate Engineers (GEs) பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் 100 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம் Bureau of Indian Standards (BIS)
பணியின் பெயர் Graduate Engineers (GEs)
பணியிடங்கள் 100
விண்ணப்பிக்க ஆரம்பத் தேதி 06.08.2022
விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 21 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் மூலம் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

BIS காலிப்பணியிடம் :

கல்வித்தகுதி :

விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் சம்பந்தப்பட்ட பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இல்லையெனில் BE/B. Tech in EEE/FCT/MCM படித்திருக்க வேண்டும். அதோடு முதுகலை டிப்ளமோ மேனேஜ்மென்ட் படித்தல் அல்லது M.Phil, M.Tech. M.S., Ph.D கூடுதல் தகுதிகள், ஆராய்ச்சி அனுபவம், ஆகியவை தகுதிகளாக உடையவர்களும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள்.

BIS சம்பள விவரம் : இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் ரூ. 50, 000/- சம்பளமாக பெறுவர்.

BIS வயது வரம்பு : (BIS Recruitment 2022)

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் BIS விதிமுறைகளின் படி வயது தளர்வுகள் அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

BIS விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான பட்டதாரிகள் அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியானதில் இருந்து 21 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

BIS விண்ணப்ப கட்டணம் விவரம் : இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் கிடையாது. கல்வித் தகுதி இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

BIS ஆட்சேர்ப்பு 2022 தேர்வு செயல் முறை :

விண்ணப்பப் படிவத்தில் வழங்கப்பட்ட தகுதிகள், அனுபவம் மற்றும் பிற விவரங்களின் அடிப்படையில் shortlist செய்யப்படுவர். shortlist செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் practical assessment, written assessment, technical knowledge assessment மற்றும் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.

BIS ஆட்சேர்ப்பு 2022க்கு எப்படி விண்ணப்பிப்பது : (BIS Recruitment 2022).

படி : 1 விண்ணப்பதாரர்கள் BIS இணையதளம் அதாவது bis.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

படி : 2 விண்ணப்பிக்கும் முன் அறிவிப்பினை முழுமையாக படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

படி : 4 emails முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். மற்ற வழிமுறைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

படி : 5 Click here to Apply Online என்பதில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.

படி : 6 அதிகாரிகள் தொடர்பு கொள்ள ஏற்றதாக விண்ணப்ப படிவத்தில் உங்கள் மெயில் ஐடி மற்றும் மொபைல் எண் வழங்க வேண்டும். இறுதியாக விண்ணப்பபடிவத்தை டவுன் லோடு அல்லது பிரிண்ட் அவுட் எடுத்துவைத்து கொள்ளவும்.

அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் பெற

https://www.bis.gov.in/

இந்த பக்கத்தில் காணவும்.

நாளைய வரலாறு செய்திக்காக

செந்தில் முருகன்,சென்னை தெற்கு.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp