CWG 2022, இந்திய ஆடவர் ஹாக்கி அணி, கானாவை 11-0 என்ற கோல் கணக்கில் வென்று CWG தங்கத்திற்கான தேடலைத் தொடங்கியது. இந்திய ஆடவர் ஹாக்கி அணி முதல் நிமிடத்தில் அபிஷேக் மூலம் முன்னிலை பெற்றது, ஹர்மன்ப்ரீத் 10-வது மற்றும் ஷம்ஷேர் 14-வது, நிமிடத்தில் கோள்களை செலுத்தினர்.
ஆகாஷ்தீப் நான்காவது மற்றும் ஜுக்ராஜ் ஐந்தாவது ஆகாஸ் ஹர்மன்பிரீத் ஆறாவதும், நீலகண்டா ஏழாவது மற்றும் வருண் 8-வது கோள்களை சேர்த்தனர்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஜுக்ராஜிடம் இருந்து ஒன்பதாவது, மன்தீப்பின் 10வது மற்றும் கானாவுக்கு எதிராக ஹர்மன்பிரீத்தின் 11வது கோள்களை செலுத்தி வெற்றிய எட்டியது.
இந்தியா, கனடா, இங்கிலாந்து, கானா மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகளுடன் ‘பி’ பிரிவில் இடம்பெற்றுள்ளது. 1975 ஆண்களுக்கான உலகக் கோப்பைக்குப் பிறகு கானாவுக்கு எதிராக இந்தியா விளையாடுவது இதுவே முதல் முறை. கடைசியாக இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியதில் இந்திய அணி 7-0 என வெற்றி பெற்றது.
2018 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் போது இந்தியா 4வது இடத்தைப் பிடித்தது. ஆகஸ்ட் 1ஆம் தேதி பர்மிங்காமில் நடைபெறும் இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஹரிசங்கர், கோவை.