சென்னை தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. 383வது பிறந்த நாள் காணும் வரலாற்று சிறப்பு மிக்க சென்னை தினத்தை கொண்டாடும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் கனமழையில் ஆட்டம் பாட்டம் என கலை நிகழ்ச்சிகளும் நடனங்களும் களைகட்டின.
எந்த ஊரை சேர்ந்தவராக இருந்தாலும் சென்னை மாநகரம் அவர்களுக்கான தேவையை நிறைவேற்ற தவறியதேயில்லை. வந்தாரை வாழவைக்கும் சென்னை மாநகரம் பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்க நினைவுகளை தன்னுள்ளே கொண்டுள்ளது.
தமிழகத்தில் கடைக்கோடி கிராமத்தில் இருந்து வருவோர் முதல், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பிழைப்பு தேடி வருவோரையும், கல்விக்காக வெளிநாடுகளில் இருந்து வருவோரையும் சென்னை மாநகரம் அரவணைக்கிறது.
சென்னைப் பட்டினம் 1639-ம் ஆண்டு உருவானது. 383 ஆண்டுகளில் சென்னை மாநகரம் பல்வேறு நிலைகளில் வளர்ச்சி அடைந்து சாதித்துள்ளது. எத்தனையோ இயற்கை இடர்பாடுகளை சந்தித்தாலும் அதிலிருந்து விரைவில் மீண்டு விடும் சென்னை மாநகரம். சுனாமியோ, பெருவெள்ளமோ, புயல் மழையோ எதையும் சமாளித்து விடுவார்கள் சென்னை மாநகர மக்கள்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இன்று சென்னைக்கு 383வது பிறந்த நாள் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22-ம் தேதி சென்னை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சென்னை தினத்தை கொண்டாடும் வகையில் மாநகராட்சி இந்திய தொழில் கூட்டமைப்புடன் இணைந்து பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை சாலையில் பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தன.
சென்னை தின கொண்டாட்டத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு, சென்னை மேயர் பிரியா ஆகியோர் தொடங்கி வைத்தனர். வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் சென்னை தினம் கோலாகலமாக நடைபெற்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் இதில் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
383ஆவது ஆண்டு சென்னை தினத்தை முன்னிட்டு சுற்றுலாத் துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் பழமை வாய்ந்த மிதிவண்டி கண்காட்சி நேற்று நடைபெற்றது.சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற இந்த கண்காட்சியை சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத் துறை செயலர் சந்தரமோகன், சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி ஆகியோர் தொடங்கி வைத்தனர். அப்போது, அவர்கள் ‘குளோபல் ஹெரிடேஜ் ஆப் மெட்ராஸ்’ என்ற புத்தகத்தையும் வெளியிட்டனர்.
இந்த கண்காட்சியில் 1800-ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருந்த மிதிவண்டிகள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன. மேலும், பல்வேறு பழமை வாய்ந்த மிதிவண்டி முகப்பு விளக்குகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. முன்பாக, காலை 5 முதல் 8 வரை சைக்கிளிங் நடைபெற்றது. தொடர்ந்து மிதிவண்டி கண்காட்சியும், மாலை 4 முதல் 6 வரை பாரம்பரிய உணவு நடைபயணமும் நடைபெற்றன.
-செந்தில் முருகன், சென்னை தெற்கு.