கோவில்பட்டி அருகே முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள திட்டங்குளத்தின் ஊராட்சி மன்றத் தலைவர் பொன்ராஜ் படுகொலை செய்யப்பட்டுள்ளது பதற்றத்தை பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பொன்ராஜ், திட்டங்குளம் பஞ்சாயத்து தலைவராக 40 ஆண்டுகள் தொடர்ந்து பதவி வகித்தவர். பொன்ராஜ் கடந்த 1986-ம் ஆண்டு முதல் திட்டங்குளம் பஞ்சாயத்து தலைவராக இருந்தார். அந்த பஞ்சாயத்து தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதுபோது, பொன்ராஜின் மனைவி பொன்னுத்தாய் வென்றார். பொன்ராஜ் எப்போதும் தலைப்பாகை அணிந்து இருந்ததால், அவரை தலைப்பாய் கட்டு தலைவர் என்று அழைத்து வந்தனர்.
நேற்று பிற்பகல் 12 மணியளவில் தெற்குத் திட்டங்குளம் காலனி பகுதியில் உள்ள தோட்டத்திற்கு விவசாயப் பணிகளை மேற்கொள்வதற்காக சென்ற போது அங்கு மறைந்திருந்த மர்மநபர்கள் அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் சம்பவத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அரசியல் பிரச்சனை காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? தனிப்பட்ட முன்விரோதம் காரணமா? என போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.