வனவிலங்குகள் பிரச்னைக்கு, நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை, இனி எந்த தேர்தலிலும் ஓட்டு போடுவதில்லை என, பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பேனர் வைத்துள்ளனர். மேட்டுப்பாளையம் தாலுகாவில், சிறுமுகை, மேட்டுப்பாளையம், காரமடை ஆகிய மூன்று வனப்பகுதிகள் உள்ளன. இந்த வனப் பகுதிகளில் ஏராளமான யானைகள், காட்டு மாடுகள், மான்கள், காட்டு பன்றிகள், சிறுத்தை, புலி உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் உள்ளன.
இதில் சிறுத்தை, புலி ஆகிய இரு வனவிலங்குகளை தவிர, மற்ற வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்கு வந்து, பயிர்களை சேதம் செய்கின்றன. இதனால் ஒவ்வொரு விவசாயிகளுக்கும், ஆயிரக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது.வனப்பகுதியை ஒட்டியுள்ள, விவசாய நிலங்களில், யானைகள், மான்கள், காட்டுப்பன்றிகள் ஆகியவை, அதிக அளவில் பயிர்களை சேதம் செய்து வருகின்றன. விவசாய, குடியிருப்பு நிலங்களுக்கு வரும் வனவிலங்குகளை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் வனத்துறை போதுமான நடவடிக்கை எடுப்பதில்லை என, விவசாயிகள் புகார் கூறி வருகின்றனர்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
காரமடை அடுத்த சீளியூர் கிராமத்தில், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், அரசு அதிகாரிகள் பார்வைக்கு, அறிவிப்பு பேனர் வைத்துள்ளனர். அதில் ‘கடந்த, 20 ஆண்டுகளுக்கு மேலாக, யார் ஆட்சிக்கு வந்தாலும், வனவிலங்கு பிரச்னை தீர்க்கப்படாமல், மேலும் அதிகரித்து விவசாய பயிருக்கும், மனித உயிருக்கும், பாதுகாப்பு உத்தரவாதம் இல்லாத நிலை நீடிக்கிறது.
எனவே மயில் மற்றும் வனவிலங்குகள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை, எந்த தேர்தலிலும் ஓட்டு போடுவதில்லை’- இப்படிக்கு வனவிலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் என, குறிப்பிட்டுள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: வனவிலங்குகள் வனத்தில் இருந்து வெளியில் வருவதை கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கை தேவை. வனத்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. காட்டு பன்றிகள் கூட்டம் கூட்டமாக, விவசாய நிலங்களில் புகுந்து, பயிர்களை முற்றிலும் சேதம் செய்கின்றன. யானையை விட காட்டுப்பன்றி தொல்லைகள் அதிகரித்துள்ளன. பயிர்களையும், உயிர்களையும் தொடர்ந்து பறிகொடுத்து வருகிறோம். பலமுறை அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. அதனால் அதிகாரிகளின் கவனத்திற்கு தெரியப்படுத்தும் வகையில், இனிவரும் எவ்வித தேர்தல்களிலும் ஓட்டு போடுவதில்லை என, முடிவு செய்துள்ளோம். இவ்வாறு மக்கள் கூறினர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.