தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தில் நடைபெற இருக்கும் அதிமுக பொன்விழாவில் கலந்து கொள்ள, முன்னாள் அமைச்சர் ஆ. பி. உதயகுமார் எம்எல்ஏவிற்கு எட்டையபுரம் நகர செயலாளர் ராஜகுமார் நேரில் சந்தித்து அழைப்பு கொடுத்தார்.
தூத்துக்குடி அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் செ.ராஜூ எம்எல்ஏவின் ஆலோசனையின் பெயரில், எட்டையபுரத்தில் வரும் 20. 08. 2022 அன்று நடைபெற இருக்கும் அதிமுகவின் 50 வது ஆண்டு பொன்விழாவில், சிறப்பு அழைப்பாளராக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளரும்,
முன்னாள் அமைச்சரும், திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினருமாகிய ஆர். பி. உதயகுமார் கலந்து கொண்டு சிறப்பித்திட வருகை தருமாறு, அவரை இன்று, எட்டையபுரம் நகர செயலாளர் ராஜகுமார் நேரில் சந்தித்து அழைப்பு கொடுத்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.