ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவ் மகள் கந்தமனேனி உமா மகேஸ்வரி, ஆகஸ்ட் 1ஆம் தேதி திங்கள்கிழமை ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. அவர் சிறிது காலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஜூப்ளி ஹில்ஸ் சிஐ ராஜசேகர் ரெட்டி இது தற்கொலை என்றும், விசாரணைக்கு பிறகே காரணம் தெரியவரும் என்றும் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு தேசம் பார்டியின் (டிடிபி) நிறுவனர் என்.டி.ஆர் இன் 12 குழந்தைகளில் உமா இளையவர், மேலும் நான்கு சகோதரிகளில் இளையவர். முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான டக்குபதி புரந்தேஸ்வரியும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவின் மனைவியுமான நாரா புவனேஸ்வரி அவரது சகோதரிகள் ஆவர். சந்திரபாபு நாயுடு, அவரது மகன் நாரா லோகேஷ் மற்றும் பிற குடும்பத்தினர் மகேஸ்வரியின் இல்லத்திற்கு விரைந்து உள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஹரி சங்கர், கோவை வடக்கு.