தூத்துக்குடி அருகே புதூர்பாண்டியாபுரம் பகுதியில் உள்ள காற்றாலையில் கடந்த மாதம் ரூ. 2 லட்சம் காப்பர் ஓயர்கள் திருட்டு போனது. இது தொடர்பாக காற்றாலை மேலாளர் கணேசன் என்பவர் சிப்காட் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையே குலசேகரன்பட்டினத்தில் நடந்த திருட்டு வழக்கில் தொடர்புடைய ஒரு கும்பலை போலீசார் கைது செய்தனர்.
அந்தக் கும்பலில் இருந்த மடத்தூரை சேர்ந்த மாரிச்செல்வம் (34) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் புதூர்பாண்டியாபுரம் காற்றாலையில் திருடியது தெரியவந்தது. மேலும் அவருடன் சிவா, செல்வக்குமார், தனகுருசிங், அருணாச்சலம், மற்றொரு செல்வக்குமார் ஆகியோர் ஈடுபட்டதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 250 கிலோ காப்பர் சுமார் 4 ஆயிரம் மீட்டர் ஒயர்களை மீட்டனர். அதன் மதிப்பு 2 லட்சம். மாரிச்செல்வம் மீது தூத்துக்குடியில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குள் நிலுவையில் உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
–முனியசாமி ஓட்டப்பிடாரம்.