விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ஆம் தேதி நாடுமுழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்த வகையில் கோவை மாவட்டம் ஆனைமலை நகரில் தெற்கு தெருவில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாக ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தி திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. எனவே இந்த வருடமும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி அன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. எனவே அதனை முன்னிட்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி சனிக்கிழமை இன்று விநாயகர் சதுர்த்தி விழா விற்கு உரிய ஆயத்த பணியாக இளைஞர்கள் களிமண்ணால் சுயமாக விநாயகர் சிலை செய்து சிலைக்கு வர்ணம் பூசும் பணியைத் துவங்கியுள்ளனர்.
நாளை வரலாறு செய்திக்காக
–அலாவுதீன் ஆனைமலை.