வளர்ந்து வரும் நமது தேசத்தில் வாகன போக்குவரத்து என்பது இன்றியமையாதது ஆகிவிட்ட இந்த நேரத்தில் வாகனங்களும் பெருகிவிட்டன. வீட்டுக்கு வீடு வசதி வாய்ப்புக்கேற்ப இருசக்கர வாகனங்களும் நான்கு சக்கர வாகனங்களும் உள்ளன.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
வாகனங்களில் உள்ள நம்பர் பிளேட்டுகளில் அந்தந்த வாகனங்களின் பதிவு எண்ணை எழுதாமல் வேறு ஏதேதோ எழுதும் போக்கு அதிகரித்து வருகிறது. ஒரு வாகனத்தின் பதிவு எண்ணை அதற்குரிய இடத்தில் எழுத வேண்டும்.
ஆனால் சிலர் மோட்டார் வாகன விதிமுறையை மீறி செயல்படுகின்றனர். இது மோட்டார் வாகன சட்டப்படி தவறு என்பது அனைவருக்கும் தெரியும்.இருந்தாலும் இதை சிலர் மீறி வருகின்றனர்.
இதை அரசு அதிகாரிகள் கவனத்தில் கொண்டு இதுபோன்ற மோட்டார் வாகன சட்ட விதிமுறைகள் மீறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாகக உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி. ராஜேந்திரன்.