கோவை சிங்காநல்லுாரில் குழாய் உடைப்பால் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர், சாலையில் வெளியேறி வீணாகிறது. சிங்காநல்லுார் போலீஸ் ஸ்டேஷன் எதிர்புறம், சிக்னலை ஒட்டி பிரதான குடிநீர் குழாய் செல்கிறது. விமான நிலையத்துக்கு குடிநீர் வழங்கும் இந்த குழாயில், நான்கு நாட்களுக்கு முன் லேசான உடைப்பு ஏற்பட்டது.இது பற்றி அப்பகுதி பொதுமக்கள், குடிநீர் வடிகால் வாரியத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
எனினும் சரி செய்யவில்லை. விசாரித்தபோது, ‘மூன்று நாள் விடுமுறை என்பதால், உடைப்பை சரி செய்வதற்கு ஆளில்லை’ என்று தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், கசிவு இருந்த இடத்தில் நேற்றுமுன்தினம் இரவு, பெரிய அளவில் உடைப்பு ஏற்பட்டது. குழாயில் இருந்து அதிக வேகத்துடன் கொப்பளித்து, மூன்றடி உயரத்துக்கு தண்ணீர் மேலே எழும்பியபடி வெளியேற ஆரம்பித்தது.
நேற்று இரவு வரை இதே நிலை நீடித்தது. அருகிலேயே இன்னும் மூன்று வெவ்வேறு இடங்களிலும் சிறிய அளவில் குழாய் உடைப்புகள் ஏற்பட்டு, தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது.பெரும் பொருட்செலவில் குடிநீர் திட்டங்களை நிறைவேற்றி, நகருக்குள் கொண்டு வரப்படும் தண்ணீர், சாலையில் வீணாவதை கண்ட பொதுமக்கள் வேதனைப்பட்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.