தனுஷ்கோடி-கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கேப் ரோட்டில் சில வாரங்களுக்கு முன் பலத்த மழை காரணமாக மண் சரிவு ஏற்ப்பட்ட நிலையில் சில நாட்களுக்கு பின்னர் சாலையின் ஒருபகுதியை வாகனம் செல்லும் வகையில் சீர் செய்யப்பட்டது. ஆனாலும் வாகன ஓட்டுநர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. காரணம் எல்லா கால நிலையிலும் கேப் சாலையில் அடர்ந்த மேக மூட்டத்துடன் காணப்படும் எனவே பாதி சாலையில் விழுந்த கற்கள் மற்றும் மன்மேடுகள் தெரிவதில்லை .மேலும் இந்த பாதை மிகவும் உயர்வான மற்றும் குறுகிய சலையாகவும் அமைய பெற்றுள்ளதால் வாகன விபத்து நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறை உடனடியாக சாலைகளில் உள்ள கல் மற்றும் மண் மேடுகளை அகற்ற வேண்டும் என ஓட்டுனர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
–ஜான்சன் மூணார்.