தபால் துறையை கார்ப்பரேசன் ஆக்கும் திட்டத்தை கைவிட வேண்டும், அஞ்சல் துறை சேமிப்பு கணக்குகளை ஐ. பி. பி. பி-க்கு மாற்றம் செய்வதை கைவிட வேண்டும், ஆர். எம். எஸ் பிரிவை மூடும் திட்டத்தை கைவிட வேண்டும்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தேசிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம் இன்று நடந்தது.
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள் வேலைக்கு செல்லவில்லை. அதே நேரத்தில் மற்றொரு சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள் பணிக்கு வந்தனர். இதனால் பல அஞ்சல் நிலையங்கள் குறைந்த அளவிலான பணியாளர்களுடன் இயங்கியது. சில அஞ்சல் நிலையங்கள் மூடப்பட்டு இருந்தன.
தூத்துக்குடி மாநகரில் 9 அஞ்சல் அலுவலகங்கள் மூடப்பட்டு இருந்தன. இதனால் பணப் பரிவர்த்தனை, தபால் தலை வினியோகம், தபால் கார்டு விநியோகம், மணியார்டர் அனுப்பும் பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.