கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்தது. கோடையை போன்று வெயில் சுட்டெரித்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை திடீரென கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரம் கனமழை நீடித்தது. இதனால் கோவில்பட்டி மெயின் ரோடு, மார்க்கெட் ரோடு, மந்தித்தோப்பு ரோடு, புதுரோடு உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இளையரசனேந்தல் சுரங்கப்பாதையில் சுமார் 3 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியது. இதனால் அந்த வழியாக வந்த தனியார் பள்ளி பேருந்து மழைநீரில் சிக்கி செல்ல முடியாமல் தத்தளித்தது. பஸ்சுக்குள் மழைநீர் புகும் அபாயம் ஏற்பட்டதால் அதிலிருந்த 25க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் பயத்தில் கூச்சலிட்டு அபயக்குரல் எழுப்பினர்.
இதையடுத்து அந்த வழியாகச் சென்றவர்கள் மற்றும் பஸ் டிரைவர், உதவியாளர். பெற்றோர் ஆகியோர் ஒவ்வொரு குழந்தையாக பஸ்சில் இருந்து இறக்கி அவர்களை பாதுகாப்பாக தூக்கி வெளியே கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முத்தரசு கோபி, ஶ்ரீவைகுண்டம்.