தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் கோவையில் 6,572 மையங்கள் செயல்பட்டு வரும் நிலையில் தற்போது கூடுதலாக 150 மையங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் பெருந்தொற்று ஊரடங்கு காலத்திற்கு பின்னர்
பள்ளிக்கு வரும் மாணவர்களின் கற்றல் இடைவெளியை போக்க, திறனை மேம்படுத்த, மாணவர்களின் இல்லங்களுகே தன்னார்வலர்கள் மூலம் பள்ளி முடிந்ததும் மாலையில் 1.5 முதல் 2 மணி நேர சிறப்பு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் பாடங்கள் குறித்த சந்தேகங்கள் பற்றி கேட்டு தெளிவு பெறலாம்.
தற்போது மாணவர்கள் நலனுக்காக மேலும் 150 மையங்கள் கோவையில் அமைய உள்ளன. இம் மையங்களில் செயல்பட தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் இம்மையங்கள் பயன்பாட்டுக்கு வரும் எனவும் தகவல்கள் கூறுகின்றன!!!
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை.