கோவை மாவட்டம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு திடீரென கனமழை பெய்தது அதனால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ரயில்வேபாலத்தின் அடியில்தேங்கியுள்ள தண்ணீரினாலவாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.
கோவை மாவட்டம் போத்தனூர் செட்டிபாளையம் சாலை உள்ள லட்சுமி நாராயண காலேஜ் எதிர்புறம் உள்ள சீயோன் கார்டன் ஜே ஜே நகர் செல்லும் பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
இது போன்ற தண்ணீர் தேக்கம் மழை பெய்தவுடன் அந்த பகுதியில் தேங்குவதால் சாலை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தண்ணீரை உறிஞ்சும் இயந்திரம் கொண்டு அகற்றுவதற்கு
முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று அந்தப் பகுதி வாகன ஓட்டிகளும் பொது மக்களும் கோரிக்கை விடுகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தலைமை நிருபர்,
-ஈசா.