கோவையில் சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷன் சார்பில் ஐ.எஸ். ஆர். மராத்தான்- 3வது பதிப்பு ஞாயிறு வ. உ. சி. மைதானத்தில் நடைபெற்றது. இந்த மராத்தானில் மாற்றுத்திறனாளிகள் உட்பட சுமார் 15000 பேர் பங்குபெற்றனர். மொத்தம் 10 கிலோமீட்டர் தொலைவு கொண்ட இந்த மாரத்தானில் மாற்று திறனாளிகள் 1 கிலோமீட்டர் வரை செல்ல அவர்களுக்கு ஏற்ப தன்னார்வலர்கள் உதவினர்.
சமுதாயத்தில் போதிய ஆதரவு இல்லாத மாற்றுத்திறனாளிகள் பல்லாயிரக்கணக்கானோர் உள்ளனர், அவர்கள் வாழ்க்கையில் நம்மை போல் உயர நாம் அனைவரும் சேர்ந்து உதவ முன்வரவேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த போட்டி நடைபெற்றது.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மாரத்தான் போட்டி முடிவடைந்ததும் வாழ்க்கையில் பொருளாதார ரீதியாகவும் பல காரணங்களினால் நலிவடைந்த 1000 பேர் வாழ்க்கையில் முன்னேற முதற்கட்ட உதவிகள் வழங்கப்பட்டது. எஸ்.எஸ். வி.எம் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் மணிமேகலை மோகன், எஸ்.எஸ். வி.எம் கல்வி நிறுவனங்களின் கல்வி இயக்குனர் ஶ்ரீ ரிஷா நிதின், செஃப் தாமு, கொடி அசைத்து மரத்தானை துவக்கி வைத்தனர்.
மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், பார்வை குறைபாடு உள்ளவர்கள், கிராமப்புறங்களில் சிரமப்படும் பெண்கள் ஆகியோரனுடைய நிலைமையை கண்டு சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷன், அவர்களுக்கு முதல் கட்டமாக திறன் மேம்பாட்டு பயிற்சியை இலவசமாக வழங்கி அவர்கள் ஒரு பணியில் அமரவும் அல்லது அவர்கள் ஒரு சிறு வியாபாரத்தை துவக்கவும் வழி செய்துள்ளது, என்று சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷனின் இணை நிறுவனர் சசிகலா சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
1248 பேரு இதுவரை இந்த பவுண்டேஷனால் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சியை பெற்று வேலைகளில் அமர்ந்துள்ளனர். மாற்றுத்திறனாளிகள் உட்பட நலிவடைந்த 1000 பேர் வாழ்க்கையில் முன்னேற மாரத்தான் முடிந்ததும், கண் கண்ணாடிகள், செவிப்புலன் திறனை மேம்படுத்தும் கருவிகள், செயற்கை கால்கள் இலவச தையல் மெஷின், மூன்று சக்கர சைக்கிள் போன்ற உபகரணங்கள் லயன்ஸ் இன்டர்நேஷனல் தொண்டு நிறுவனத்தின் பேருதவியோடு, லேடீஸ் சர்கில், மார்டின்ஸ் அறக்கட்டளை, ரோட்டரி டெக்ஸிட்டி சங்கம், எஸ்.எஸ். வி.எம் கல்வி நிறுவனங்கள் உதவியுடன் வழங்கப்பட்டது.
– சீனி, போத்தனூர்.