கோவை நாகசக்தி அம்மன் அருள் பீடத்தில் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு,பெண்களை போற்றும் விதமாக 108 சுமங்கலி பெண்களுக்கு 16 வகையான மரியாதை செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் அமைந்துள்ள அருள் மிகு ஸ்ரீ நாகசக்தி அம்மன் அருள் பீடத்தில் ஒவ்வொரு ஆண்டும் வரலட்சுமி நோன்பு துவங்குவதை முன்னிட்டு ஏராளமான பெண்கள் கலந்து கொள்ளும் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அதே போல இந்த ஆண்டும் கோவை உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெண்கள் தங்களது தாலி பாக்கியம் வேண்டி விரதம் இருந்து வரலட்சுமி அம்மனுக்கு பூஜை செய்து வழிபடும் விழா நடைபெற்றது. ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக சுந்தர பாபுஜி தலைமையில், நடைபெற்ற இதில்108 சுமங்கலி பெண்களுக்கு தீபம், நெய்வேத்தியம் உள்ளிட்ட 16 வகை மரியாதைகள் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
இது குறித்து சிவசண்முக சுந்தர பாபுஜி, கூறுகையில்: “வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களுக்கு மாங்கல்ய பலம் நீடிப்பதோடு செல்வம், தைரியம், வெற்றி, அரசு பதவி, குழந்தைப் பேறு, கல்வி உள்ளிட்ட எல்லா வளங்களும் வந்து சேரும் எனவும் எனவே முறையாக இந்த விரதத்தை கடைபிடித்தால் அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கும்” என தெரிவித்தார். மலுமிச்சம்பட்டி நாகசக்தி அருள் பீடத்தில் நடைபெற்ற இந்த பூஜைக்கான ஏற்பாடுகளை அருள் பீடத்தின் மகளிர் அணியினர் மாதாஜி சரஸ்வதி அம்மாள், உமா மகேஸ்வரி, பாக்கியலட்சுமி, வனஜா ,வாசுகி, மகேஸ்வரி, லதா, மீனா ஆகியோர் செய்து இருந்தனர்.
– சீனி,போத்தனூர்.