மதுக்கரையில் தனியார் சிமென்ட் தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது. சிமென்ட் தயாரிக்க தேவையான மூலப்பொருள் ரயில் மூலம் வெளி மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்படும். நேற்று முன்தினம் காலையும், வேகன்களில் மூலப்பொருள் கொண்டு வரப்பட்டது.
தொழிற்சாலைக்குள் சென்ற ரயில், மீண்டும் வெளியே வந்தபோது எதிர்பாராவிதமாக இன்ஜின் தடம் புரண்டது. இதனால் மதுக்கரை கடைவீதியிலிருந்து, குவாரி ஆபீஸ் செல்லும் சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப் படவில்லை. ரயில்வே ஊழியர்கள் உதவியுடன், பொக்லைன் இயந்திர வாகனம் மூலம் வேகன்கள் உள்ளே கொண்டு செல்லப்பட்டன.
தொடர்ந்து, நேற்று மாலை வரை இன்ஜினை மீட்கும் பணி நடந்தது. தொழிற்சாலைக்கான தனி டிராக்கில் நடந்த இச்சம்பவத்தால், வழக்கமான ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படவில்லை.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-அருண்குமார், கிணத்துக்கடவு .