கோவை மாவட்டம் சிறைச்சாலை மைதானத்தில் கடந்த ஜூன் 11ம் தேதி முதல் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அரசுப் பொருட்காட்சி நடைபெற்று வந்தது. இப்பொருட்காட்சியானது தொடர்ந்து 45 நாட்கள் நடைபெற்று கடந்த 31ம் தேதியுடன் நிறைவு பெற்றுள்ளது.
இப்பொருட்காட்சியில் 27 அரசுத்துறை அரங்குகளும், 4 அரசுசார்பு நிறுவனங்கள் என மொத்தம் 31 அரசுத்துறை அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. அரசின் திட்டங்கள் மட்டுமின்றி பொழுதுபோக்கு அம்சங்களும் இப்பொருட்காட்சியில் இடம் பெற்றிருந்தன. அரசுப்பொருட்காட்சியை காண வந்த பெரியவர்களுக்கு ரூ.15ம், சிறியவர்களுக்கு ரூ.10ம் நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்பட்டது.
இப்பொருட்காட்சியினை 2 லட்சத்து 11 ஆயிரத்து 904 பெரியவர்களும், 42 ஆயிரத்து 995 சிறியவர்களும் என மொத்தம் 2 லட்சத்து 54 ஆயிரத்து 899 நபர்கள் பார்வையிட்டுள்ளனர். இதன் மூலம் ரூ. 36 லட்சத்து 8 ஆயிரத்து 510 அரசுக்கு வருவாய் வரப்பெற்றுள்ளது
என தெிவிக்கப்பட்டுள்ளது!!!
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை.