சூலுார் பிரிவில் சர்வீஸ் ரோட்டில் நிறுத்தப்படும் கனரக வாகனங்களால், விபத்துக்கள் தொடர்ந்து அரங்கேறி வருவதாக புகார் எழுந்துள்ளது.சூலுார் அடுத்த சூலுார் பிரிவு, முதலிபாளையம் பிரிவு உள்ளிட்ட இடங்களில் அவிநாசி ரோட்டை ஒட்டி, சர்வீஸ் ரோடுஉள்ளது.இப்பகுதியில் லாரி புக்கிங் ஆபீஸ்கள் பல உள்ளன. வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து வரும் கனரக வாகனங்கள், அடுத்த வாடகை கிடைக்கும் வரை சர்வீஸ் ரோடுகளில் நிறுத்தப்படுகின்றன.இதனால், சர்வீஸ் ரோடுகளில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
இதுகுறித்து வாகனஓட்டிகள் கூறியதாவது: வெகுநேரம் நிற்கும் வாகனங்களை முந்தி செல்லும் போது, எதிரில் வரும் வாகனங்கள் மோதி விபத்தில் சிக்குகின்றனர். அதனால், இப்பகுதிகளில் உள்ள சர்வீஸ் ரோடுகளில் கனரக வாகனங்களை நிறுத்துவோர் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, வாகனஓட்டிகள் கூறினர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.