சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி சுற்றுவட்டார மக்களிடையே அளப்பரிய சேவைகளின் மூலம் நற்பெயரை பெற்றுள்ள பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக காப்பாரப்பட்டி கிராமத்தில் இலவச சித்த மருத்துவ விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
முகாமில் சித்த மருந்துகள் வழங்கப்பட்டதுடன் மூலிகை கண்காட்சி, வர்ம சிகிச்சை, மாணவர்களுக்கான யோகா பயிற்சியும் அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின், விரிவான மக்களைத் தேடி மருத்துவ திட்டம் மூலமாக 200 பேருக்கு சர்க்கரை மற்றும் குருதி அழுத்தம் சோதனை செய்யப்பட்டது. நோயாளிகளுக்கு இயன்முறை மருத்துவம் மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டது.
இம்முகாமை மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் பிரபாகரன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
பிரான்மலை ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் நபிஷா பானு,
கண்ணமங்கலப்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் செம்மலர் சந்திரன்,
துணைத்தலைவர் ஜெயசுந்தரி சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் சித்தமருத்துவர்கள் சரவணன் மற்றும் ரஹிமா பானு ஆகியோர் சிகிச்சை அளித்தனர்.
முகாமிற்கான ஏற்பாடுகளை பிரான்மலை ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார மேற்பார்வையாளர் தினகரன் மற்றும் சுகாதார ஆய்வாளர் எழில்மாறன் உள்ளிட்ட குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.
மருத்துவ குணமுடைய மூலிகைத் தாவரங்கள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் இம்முகாமில் மூலிகை கண்காட்சி, மூலிகை மருந்துகள் மற்றும் உணவுக்கண்காட்சி, நோய் எதிர்ப்பு சக்தி வாய்ந்த சித்த மருந்துகள் ஆகியன காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இம் முகாமில் 240 பேர் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.