சிங்கம்புணரி அருகே உள்ள செல்லியம்பட்டி கிராமத்தில் பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக இலவச சித்த மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. முகாமில் சித்த மருந்துகள் வழங்கப்பட்டதுடன் மூலிகை கண்காட்சி, வர்ம சிகிச்சை, மாணவர்களுக்கான யோகா பயிற்சியும் அளிக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் விரிவான மக்களைத் தேடி மருத்துவ திட்டம் மூலமாக 200 பேருக்கு சர்க்கரை மற்றும் குருதி அழுத்தம் சோதனை செய்யப்பட்டது.
நோயாளிகளுக்கு இயன்முறை மருத்துவம் மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. இம்முகாமை ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம், துணைத்தலைவர் சின்னையா மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கணபதி ஆகியோர் துவக்கி வைத்தார்கள். முகாமில் சித்தமருத்துவர் சரவணன் மற்றும் ரஹிமா பானு ஆகியோர் சிகிச்சை அளித்தனர். முகாமிற்கான ஏற்பாடுகளை பிரான்மலை ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் எழில்மாறன் உள்ளிட்ட குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.
மருத்துவ குணமுடைய மூலிகைத் தாவரங்கள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் இம்முகாமில் மூலிகை கண்காட்சி, மூலிகை மருந்துகள் மற்றும் உணவுக்கண்காட்சி, நோய் எதிர்ப்பு சக்தி வாய்ந்த சித்த மருந்துகள் ஆகியன காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இம் முகாமில் 250 பேர் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.
-ராயல் ஹமீது, சிங்கம்புணரி.