நாடு முழுவதும் சுதந்திர தின அமுதப் பெருவிழா நேற்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் பேருந்து நிலையம் எதிரே உள்ள முஸ்லிம் ஜமாத் பள்ளிவாசலில் நேற்று காலை தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஜமாத் தலைவர் ராஜா முகமது தலைமை வகித்தார்.
ஜமாத் நிர்வாகிகள் இக்பால் உள்ளிட்ட அனைவரும் முன்னிலை வகிக்க சிங்கம்புணரி பேரூராட்சித் தலைவர் அம்பலமுத்து தேசியக்கொடியை ஏற்றினார்.
நிகழ்வில் முனைவர் எஸ்.எஸ்.மணியன், பள்ளிவாசல் இமாம்கள் அனிபா மற்றும் சாதிக், திமுக ஒன்றியப் பொருளாளர் பாஸ்கரன், நகரச்செயலாளர் கதிர்வேல் மற்றும் முஸ்லிம் ஜமாத்தார்கள் என ஏராளமான பங்கு பெற்று தேசியக்கொடிக்கு மரியாதை செய்தனர்.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.