தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் கோவையில் இருந்து திருப்பதிக்கு அரசு போக்குவரத்து கழகம், சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் முதல் பேருந்தை மாவட்ட ஆட்சியர் காந்திபுரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு ஹோட்டல் முன்பு கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் அவர் அனைவருக்கும் சிற்றுண்டிகள் அடங்கிய பைகளையும் வழங்கினார். அப்போது திருப்பதி செல்வதற்காக அங்கிருந்த மக்கள் மாவட்ட ஆட்சியருடன் புகைப்படம், செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
4000 ரூபாய் கட்டணத்தில் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்து விட்டு மீண்டும் திரும்பும் வகையில் ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளன. இக்கட்டணத்தில் உணவும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் செல்ல விரும்பும் பொதுமக்கள், www.ttdconline.com என்ற தளத்தில் புக்கிங் செய்து கொள்ளலாம் அல்லது காந்திபுரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு ஹோட்டல் நேரில் சென்று பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் திருப்பதியில்அறைகள் (for refresh) வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு வழிகாட்டி ஒருவர் உடனிருப்பார் எனவும் அவர் திருப்பதி சாமி தரிசனம் அலமேலு மங்கை தரிசனத்திற்கு அழைத்து செல்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சீட்டிங்(non sleeping) பேருந்து மட்டும் விடப்பட்டுள்ளது. அரசு சார்பில் கோவையில் இருந்து திருப்பதிக்கு பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.