கோவை மாவட்டம் சூலூர் கண்ணம்பாளையம் பகுதியில் நேற்றைய தினம் தோட்டத்தில் தொழிலாளர் ஒருவர் வேலை செய்து கொண்டிருந்தார் அப்பொழுது எதிர்பாராத விதமாக பாம்பு ஒன்று அவரை கடித்தது
இதனால் மயக்க நிலைக்கு சென்ற தொழிலாளியை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் செல்லும் வழியிலேயே தொழிலாளி உயிரிழந்ததால் அந்தப் பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொழிலாளியின் மனைவி சூலூர் காவல் நிலையத்தில் கணவர் உயிரிழந்த சம்பந்தமாக புகார் அளித்தார் புகார் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
–ராம்கி சூலூர்.