சென்னை ஒலிம்பியாட்டில் முதல் போட்டிலேயே கோமாரோஸ் அணியை வீழ்த்திய எட்டு வயது சிறுமி ராண்டா. இவர் பாலஸ்தீனத்தை சேர்ந்தவர்! அங்கு உள்ளுர் அணிகளில் ஆடி வந்தவர். தேசிய அளவில் கடந்த இரண்டு வருடங்களாக அதிகம் கவனிக்கப்பட்டவர். தேசிய அளவில் பிரபலமாக இருந்த பெண் சாம்பியன்ஷிப் அணிகளை வீழ்த்திவிட்டு இவர் டாப் இடத்திற்கு வந்தார். தேசிய அளவில் தொடர்ந்து ஒன்று அல்லது இரண்டாவது இடத்தில் ராண்டா இருந்து வருகிறார்.
இந்த நிலையில் தேசிய மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் அடுத்தடுத்து வெற்றி பெற்றவர் கடைசிப் போட்டியில் தோல்வி அடைந்தார். கடைசி இறுதிப்போட்டியில் தோல்வியடைந்து வெள்ளி பதக்கம் வென்றாலும் தேசிய சாம்பியன்ஷிப்பில் இரண்டாவது இடத்தை எட்டு வயது சிறுமி பிடிப்பது எல்லாம் சாதாரண காரியம் கிடையாது!. ஹங்கேரி கிராண்ட் மாஸ்டர் ஜுடித் போல்காரை பார்த்து வளர்ந்த ராண்டா அவரின் மூவ்களைப் பார்த்து அவரைப் போலவே ஆடத் தொடங்கி இருக்கிறார்.
ராண்டா செடார்:
ராண்டா மிகவும் வறுமையான குடும்பத்தைச் சேர்ந்தவர் இவரின் வீடு ஹெப்ரான் பகுதியில் கடுமையான போரால் பாதிக்கப்பட்ட பகுதியாகும், பலமுறை அகதிகள் கேம்பில் மற்றும் பள்ளியில் தூங்கி உயிரைக் காப்பாற்றிக் கொண்டு செஸ் ஆடி இருக்கிறார். மகளின் கவனத்தை திருப்பவே இவர் தந்தை செஸ் கற்றுக் கொடுத்திருக்கிறார். நாலு வயதிலேயே ஆட்டத்தை தொடங்கியுள்ளார். இப்போது பாலஸ்தீன அணியின் முக்கியமான வீரர். சர்வதேச அளவில் இவரின் ரேங்க் 98388. இவரின் பிறந்த வருடம் 2014.
இந்திய அணி
சென்னை செஸ் ஒலிம்பியாட் 44வது தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஆறு இந்திய அணி ஆடுகிறது. இதில் மூன்று அணிகள் பெண்கள் பிரிவு அணியாகும். இதுவரை இரண்டு போட்டிகள் நடந்தது முடிந்துள்ளன. முதல் இரண்டு அணியில் பிரக்யானந்தா உட்பட அஞ்சு வீரர்கள் வெற்றி பெற்றுள்ளார். அதேபோல கார்த்திகேயன் முரளி , அதிபன் பாஸ்கரன் ஆகியோரும் நேற்று வெற்றி பெற்றார்கள். பெண்கள் பிரிவில் நந்திதா வெற்றியை பெற்றார். இந்திய வீரர் வீராங்கனைகள் இதுபோல வெற்றிகளை குவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எ.யாஸ்மின் பேகம், சென்னை.