வெட்டுப்பாக்கு வாங்குவோரை ஏமாற்றுவதற்காக, செயற்கை சாயம் ஏற்றும் தவறை வியாபாரிகள் செய்கின்றனர். ‘இந்த மோசடியில் இருந்து தப்பிக்க, பளபளக்கும் பாக்கை வாங்காமல் தவிர்த்தாலே போதும்’ என்கின்றனர், உணவுப் பாதுகாப்புத் துறையினர்.
பளபளப்பாக இருப்பவையே தரமானவை என்ற தவறான எண்ணம், பலரது மனதில் பதிந்திருக்கிறது. அதனையே வியாபார தந்திரமாக பயன்படுத்தி, செயற்கை சாயத்தை உணவுப் பொருட்கள் மீது வியாபாரிகள், பூசி விடுகின்றனர்.உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் என்று தெரிந்தும், இத்தகைய தவறை பலரும் தொடர்கின்றனர்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இப்படி செயற்கை சாயத்துக்கு வெட்டுப்பாக்கும் தப்பவில்லை. வெற்றிலை போடும் பழக்கம், இப்போது வெகுவாக குறைந்துவிட்டது. வயது முதிர்ந்தவர்களே இன்னும் அப்பழக்கத்தை தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். எனினும் திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களில் வெற்றிலை பாக்குக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
இதற்கு பயன்படுத்தும் வெட்டுப்பாக்கு இயற்கையில் சற்று நிறம் குறைவானதாக இருக்கும். அப்படி நிறம் குறைந்த பாக்கு வாங்குவதற்கு பலரும் தயங்குகின்றனர். இதனால் வியாபாரிகள் பாக்கில் செயற்கை சாயத்தை ஏற்றி, பளபளப்பாக மாற்றி விடுகின்றனர். சாயம் ஏற்றிய பாக்குகளை பயன்படுத்துவோருக்கு நிச்சயம் உடல் நல பாதிப்புகள் ஏற்படும். இதில் இருந்து தப்பிக்க, சாயம் ஏற்றப்பட்ட பாக்குகளை வாங்காமல் தவிர்த்தாலே போதும்.
‘பளபளவென இருந்தாலே, பாக்கு சாயம் ஏற்றப்பட்டது தான் என்பதை புரிந்து கொண்டு விடலாம். தண்ணீரில் சிறிது நேரம் ஊறினால் பாக்கின் சாயம் வெளுத்து விடும்’ என்று உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகின்றனர். இத்தகைய கலப்படம் தொடர்பாக, 94440 42322 என்ற வாட்ஸ்ஆப் எண் மூலம் புகார் தெரிவிக்கலாம் என்கின்றனர், உணவுப் பாதுகாப்புத் துறையினர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.