கோயம்புத்தூர் மாவட்டம் கோவை சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். பத்தாம் வகுப்பு வரை படித்த இவர் தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் விக்னேஷ் உணவு டெலிவரி செய்ய சாய்பாபா காலனி பகுதியில் சென்று இருக்கின்றார். அப்போது பின்னால் வந்த வாகனம் ஒன்றில் இருந்த இளைஞர்கள் விக்னேஷை வழிமறித்துள்ளனர்.
அவர்கள் விக்னேஷிடம் “நீ ஏன் எங்களை முந்தி சொல்கிறாய்?” என கேட்டு வம்பு இழுத்ததாக கூறப்படுகிறது. மேலும் விக்னேஷை அந்த இளைஞர்கள் கண்ணப்பன் நகர் தண்டவாளம் பகுதிக்கு அழைத்துச் சென்று சாக்குப்பையில் கட்டி வைத்து தண்டவாள கருங்கற்களை எடுத்து சரமாரியாக அடித்துள்ளனர்.
அதில் விக்னேஷ் முகத்திலும் முதுகிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவரிடமிருந்து 22,000 மதிப்பிலான செல்போன் மற்றும் 1500 ரூபாய் ரொக்க பணத்தை எடுத்துக்கொண்டு டெலிவரி வாகனத்தை புதரில் தூக்கி எறிந்து விட்டு தப்பி சென்றுள்ளனர்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
விக்னேஷின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சாய்பாபா காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள இளைஞர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
உணவு டெலிவரி செய்யும் ஊழியரை இளைஞர்கள் சாக்கு பையில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கி ரொக்க பணம் மற்றும் செல்போனை திருடி சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.