முதல்வர் வரவேற்பு நிகழ்ச்சிக்காக தனியார் பஸ்கள் அனுப்பப்பட்டதால் அன்னுார் வழித்தடத்தில் நுாற்றுக்கணக்கான மக்கள் மணிக்கணக்கில் காத்திருந்தனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு கோவை வந்ததை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து விமான நிலையம் மற்றும் சர்க்யூட் ஹவுஸ் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதற்காக தனியார் பஸ்கள் அனுப்பப்பட்டன.
கோவை- அன்னுார்- சத்தி வழித்தடத்தில் இயங்கி வந்த, 26 தனியார் பஸ்களும், நேற்று மதியம் 12:00 மணிக்கு திடீரென மாயமாகின. இதே போல் மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னுார் வழியாக திருப்பூருக்கு இயங்கும் எட்டு தனியார் பஸ்களும் மதியம் 12:00 மணிக்கு மேல் இயங்கவில்லை. இதனால், கோவையிலிருந்து, கோவில்பாளையம், அன்னுார், புளியம்பட்டி, சத்தி செல்ல வேண்டிய பொது மக்கள் மணிக்கணக்கில் காத்திருந்தனர். மாலையில் பள்ளி, கல்லுாரிகளில் இருந்து வரவேண்டிய மாணவர்கள் இரண்டு, மூன்று மணி நேரம் தாமதமாக வீடு சென்றடைந்தனர்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதுகுறித்து எல்லப்பாளையம் பெண்கள் கூறுகையில், “கோவை காந்திபுரத்தில் இரண்டு மணி நேரம் காத்திருந்த பின்பே, அன்னுார் செல்லும் பஸ்ஸில் ஏற முடிந்தது. அதுவும் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தோம். கைக்குழந்தைகளுடன் பெண்களும், முதியவர்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினோம்” என்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.