தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் அரசு பேருந்துகள் தனியாருக்கு விடுவது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் முக்கிய விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் வாழும் பெரும்பாலான மக்கள் தாங்கள் நினைக்கும் இடத்திற்கு செல்வதற்கு அரசு பேருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆட்சிக்கு வந்த திமுக அரசு முதல் திட்டமாக பெண்களுக்காக இலவச பேருந்தை அறிமுகப்படுத்தி, தற்போது வரை நடை முறையில் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தால் ஏராளமான பெண்கள் பயனடைந்து வருகிறார்கள்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் இலவச பேருந்தின் நிறத்தை பிங்க் நிறமாக மாற்றி பெண்கள் எளிதில் கண்டுபிடித்து விட வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் போக்குவரத்து துறை அரசு பேருந்துகளை தனியாருக்கு விடப்போவதாக சில தகவல்கள் வெளியாகிய நிலையில் இது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது, பேருந்துகளில் குற்றங்கள் நடப்பதை தவிர்ப்பதற்காக கேமராக்கள் விரைவில் பொருத்தப்பட உள்ளது. குறிப்பாக தமிழகத்தின் பிரசித்தி பெற்ற பொருட்களை குறைவான நேரத்தில் அனுப்ப பார்சல் சேவையும் பேருந்துகளில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் அரசுப் பேருந்துகளை தனியார் மயமாக்குவது குறித்து எந்தொரு திட்டமும் இல்லை என்று போக்குவரத்து துறை சிவசங்கர் ஆக்கப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-சிவக்குமார்.