76 வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆழ்வார்திருநகரியில் மத்ரஸத்துர் ரஹ்மான் பள்ளிவாசலில் வைத்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆழ்வார்திருநகரி கிளை மற்றும் தூத்துக்குடி அரசு பொது மருத்துவமனை இணைந்து(15.08.2022) காலை 10.00 மணியளவில் இரத்த தான முகாம் நடைபெற்றது. TNTJ தூத்துக்குடி மாவட்ட துணை பொருளாளர் சகோ. ரஷீத் காமில் தலைமையில், ஆழ்வார்திருநகரி கிளை தலைவர் நவாஸ் முன்னிலையில் முன்னிலையில் நடைபெற்றது.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதில் சிறப்பு விருந்தினராக ஆழ்வார்திருநகரி காவல்துறை ஆய்வாளர் திரு. V. மணிவண்ணன் M.A அவர்கள் கலந்து கொண்டார்கள். மேலும் இந்நிகழ்ச்சியில் TNTJ தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மத்ரஸத்துர் ரஹ்மான் பள்ளி நிர்வாகிகள் அப்துல் ஹமீத், அக்தார் அய்யூப் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியை TNTJ தூத்துக்குடி மாவட்ட மருத்துவரணி செயலாளர் தமீம் அன்சாரி அவர்கள் தலைமையில் கிளை நிர்வாகிகளும், தொண்டரணியினரும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்ச்சியில் சுமார் 36 நபர்கள் கலந்து கொண்டனர், அதில் 30 ஆண்களும் 1 பெண்ணும் தங்களுடைய ரத்தத்தை தானமாக செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஆழ்வார்திருநகரி கிளை செயலாளர் ரியாஸ், துணை தலைவர் கமால், பொருளாளர் சேக் ரிஃபாய் மற்றும் உறுப்பினர்கள் முனவ்வர், சதாம், ஃபாயிஸ், ஷகீல், அக்மல், அனஸ், ஆஃபிக் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கும், இரத்ததானம் செய்த சகோதர, சகோதரிகளுக்கும் கிளை சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.
-அன்சாரி, நெல்லை.